வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நோட் 17 (Redmi Note 17) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், விற்பனை தேதி மற்றும் பேட்டரி, கேமரா, டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருப்பதால், ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களிடையேயும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
சீன மார்கெட்டில் 7 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன், இந்திய மார்கெட்டில் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆகஸ்ட் 11ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் அவரது எக்ஸ் தளத்தில் இந்த தேதிகளை குறிப்பிட்டுள்ளார். மேலும், 8000mAh பேட்டரி, ஓஎல்இடி டிஸ்பிளே, 50 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது அப்படியே சீன வேரியண்ட்டை போல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, சீன வேரியண்ட்டின் பீச்சர்கள் மற்றும் விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,000 பட்ஜெட்டில் தொடங்குகிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இதே பட்ஜெட்டில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.
ரெட்மி நோட் 17 அம்சங்கள் (Redmi Note 17 Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொடுக்கப்பட்டு உள்ளது.
அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 7 இன்ச் (2396 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு பெரிய டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கும் மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் இருக்கும். 50 எம்பி மெயின் கேமராவுடன் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ஃப்ரன்ட் கேமரா கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது.
மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. 8.26 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் எடை கொடுத்துள்ளது. இதே பீச்சர்களுடன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. வருகிற நாட்களில் ரெட்மி நிறுவனம், இதை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications