மார்கெட் காலி.. பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புது Redmi போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 17 (Redmi Note 17) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த வெளியீடு உறுதியானதை அடுத்து விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இது சீன வெர்ஷன்களைவிட கூடுதல் விலையாக இருக்கிறது. இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
ஜூலை 14ஆம் தேதியில் ரெட்மி நோட் 17 சீரிஸ் மாடல்கள் சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருந்ததால், இந்தியாவிலும் எதிர்பார்ப்பு எகிறிது. ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நினைத்ததைவிட முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது. ஓரிரு வாரங்களிலேயே பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட இருக்கிறது. இந்த வெளியீடு உறுதியானதை அடுத்து மார்கெட்டில் விலை விவரங்கள் கசிந்துவிட்டன. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரூ.30,000 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,000 ஆகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று அபிஷேக் யாதவ் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஏற்ப ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் வெளியீடு போஸ்டர் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த தேதியில் வெளியாகும் என்பதை ரெட்மி நிறுவனம் விரையில் தெரிவிக்கும். எப்படி பார்த்தாலும், ஓரிரு வாரங்களில் வெளியீடு முடிந்து விற்பனைக்கே இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் வந்துவிடும். ப்ரோ மாடல் வெளியாகுமா என்பதும் விரைவில் தெரியவரும்.
சீனாவில் வெளியான ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் விலையை பார்க்கையில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,000 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,000 பட்ஜெட்டிலும் இருந்தது. ஆனால், இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இது பாதிக்குப்பாதி அதிக விலையாக இருக்கிறது.
சீன வெர்ஷனில் 7 இன்ச் (2396 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கிடைத்து. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்தது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 4 4nm) கிடைக்கிறது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் உள்ளது. இதே பீச்சர்களை இந்திய வெர்ஷனில் எதிர்பார்க்கலாம். விரைவில் உறுதியாகும்.


Click it and Unblock the Notifications