செஞ்சி விட்டாப்ல.. 7 இன்ச் OLED டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் நோட் 17 சீரிஸ் மாடல்கள் வெளியாகி மார்கெட்டை மிரளவிட்டுள்ளது. இதில் வெளியாகி இருக்கும் ரெட்மி நோட் 17 (REDMI Note 17) ஸ்மார்ட்போனில் 7 இன்ச் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 8000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன.
சீன மார்கெட்டில் ரெட்மி நோட் 17 மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ (REDMI Note 17 Pro) ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாவதற்கு முன்பாக சீன மார்கெட்டில் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அதேபோல சீன வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களே மற்ற நாடுகளிலும் பெரும்பாலும் கிடைக்கும்.

இதனாலேயே ரெட்மி நோட் 17 மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக ரெட்மி நோட் 17 இருப்பதால், கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களும் இந்த ஸ்மார்ட்போனுக்காக வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.
ரெட்மி நோட் 17 அம்சங்கள் (REDMI Note 17 Specifications): 7 இன்ச் (2396 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 4 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கிடைக்கிறது.
ஹைபிரிட் டுயல் நானோ (Hybrid Dual SIM) சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
8.26 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் எடை கொடுத்துள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. இப்போது, விலைகளை பார்க்கலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,444ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,864ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,704ஆக இருக்கிறது. இந்த விலைகள் சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலையாகும். இந்தியாவில் மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications