Home
Mobile

வந்துட்டான் முரட்டு பீஸ்.. 9000mAh பேட்டரி கொண்ட முதல் Redmi ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 7 சீரீஸ் (Redmi Note 17 Series) ஸ்மார்ட்போன்கள், இந்நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் (mid-range) மாடல்கள் ஆக கூடிய விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரெட்மி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ விவரங்களை உறுதிப்படுத்தாத நிலையில், இந்த சீரீஸின் கீழ் வரவிருக்கும் ஒரு மாடலின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி ரெட்மி நிறுவனம், ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த போனில் 9,000mAh அளவிலான பேட்டரி இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இதுவரை ரெட்மி ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட மிகப்பெரிய பேட்டரிகளில் ஒன்றாக இது அமையும்.

9000mAh பேட்டரி கொண்ட முதல் Redmi ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பிளாட் ஆன 1.5கே ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளே மற்றும் அதிக சவுண்டை வழங்கும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speakers) இடம்பெறும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். டிசைன் மற்றும் பில்ட்-ஐ பொறுத்தவர, இதில் உயர்தர (flagship-grade) நீர் எதிர்ப்புத் திறன் மற்றும் மேம்பட்ட 'டிராப் ப்ரொடக்ஷன்' (கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு) வசதிகள் இருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி நோட் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 6-சீரிஸ் சிப்செட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டின் சரியான பெயர் வெளியாகவில்லை என்றாலும், அது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) ஆக இருக்கலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சிப்செட் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் முதல் பிராண்டுகளில் ரெட்மியும் ஒன்று என்று குவால்காம் (Qualcomm) நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ரெட்மி நோட் 17 சீரீஸ் தவிர, 10,000mAh பேட்டரி கொண்டதாக கூறப்படும் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போன் பற்றிய தகவலையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். இது இன்னும் உருவாக்க நிலையில் இருப்பதாகவும், அது ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) என்ற பெயரில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நிறுவனம் ஏன் ரெட்மி நோட் 15 க்கு அடுத்தபடியாக ரெட்மி நோட் 16 அறிமுகம் செய்யாமல் ரெட்மி நோட் 17-ஐ அறிமுகம் செய்கிறது? ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக ஆண்டு சுழற்சியின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும், ஆனால் இந்த முன்கூட்டிய பதிவு, ரெட்மி நோட் 17 சீரிஸ் முந்தைய தலைமுறைகளை விட முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை காட்டுகிறது.

மேலும், ஷாவ்மீ தனது தயாரிப்பு வரிசைகள் முழுவதும் பெயரிடும் உத்தியை மாற்றக்கூடும் என்றும் பேசப்படுகிறது. கிடைக்கபெற்ற அறிக்கைகளின் படி, இந்நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் குடும்பங்களில் எண்களை சீரமைக்க முயற்சிக்கக்கூடும், இது "நோட் 16" என்பதற்கு பதிலாக ரெட்மி நோட் 17 என்ற பிராண்டிங்கை கொண்டு வர வழிவகுக்கும்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8000 சீரிஸ் சிப்செட்
- 7,540mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே கட்அவுட்டிற்குள் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.37,999 என்றும், ஹை-எண்ட் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.40,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வழியாக Asphalt Black, Nitro Blue மற்றும் Turbo White ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Series Smartphone With 9000mAh Battery Snapdragon 6 Gen 5 Chip Launching Soon Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X