Home
Mobile

ப்பா.. என்னா காம்பினேஷன்.. 10000mAh பேட்டரி + 100W சார்ஜிங் + 200MP கேமரா.. புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் மிகவும் பிரபாமான நோட் சீரீஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரெட்மி நோட் 15 சீரீஸ் (Redmi Note 15 series) இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சீரீஸில் தற்போது ரெட்மி நோட் 15, ரெட்மி நோட் 15 ப்ரோ, ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 15 எஸ்இ ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன. இதற்கிடையில் ரெட்மி நோட் சீரீஸின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.

10000mAh பேட்டரி + 100W சார்ஜிங் + 200MP கேமரா.. புது Redmi 5ஜி போன்!

அதன்படி, ரெட்மி அதன் ரெட்மி நோட் 17 சீரீஸ் (Redmi Note 17 Series) ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிமுகத்தை ரெட்மி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சான்றிதழ் இணையதளத்தில் ரெட்மி நோட் 17 சீரீஸ் போன் ஒன்று காணப்பட்டுள்ளது; இது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் விரைவில் அறிமுகமாகலாம் என்பதை குறிக்கிறது.

இருப்பினும், ரெட்மி நோட் 17 சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற விவரங்கள் எதுவும் இல்லை. ஆரம்பகட்ட தகவல்களின்படி ரெட்மி நோட் 17 சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 17, ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 3 மாடல்களுடன் சேர்த்து நான்காவதாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் என்கிற மாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாடலில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Omnivision OV08F10 சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் இடம்பெறலாம். இறுதியாக, செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக Samsung ISOCELL S5KKDS சென்சார் கொண்ட 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் ஆக - இந்த பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் தொடர்பான முந்தைய லீக், இது கிட்டத்தட்ட 10,000mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரியை பேக் செய்யும் என்றும், இது 100W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் அறிமுகம் செய்யப்படலாமென்றும் கூறுகிறது - ப்ரோ மேக்ஸ் என்கிற மாடல் பெயருக்கு ஏற்றபடி இருக்கும்,

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்? தற்போதைக்கு, ஹார்ட் வேர் குறித்த விவரங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், பேஸிக் நோட் 17 இந்த சீரீஸில் மலிவு விலை மாடலாக இருக்கும், மேலும் இது ஒரு உயர்நிலை 5ஜி மாடலாக இல்லாமல், 4ஜி அடிப்படையிலான ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம்.

ஜிஎஸ்எம்ஏ பதிவில், 26012RN62L, 26012RN62Y, மற்றும் 26012RN62A ஆகிய மாடல் குறியீடுகளை கொண்ட நோட் 17 ஸ்மார்ட்போனின் மூன்று வகைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது, இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், சீனா அல்லது இந்தியாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பதிப்புகள் எதுவும் தற்போது இல்லை. ஏனென்றால் இவை இரண்டும் ரெட்மி நோட் சீரீஸின் முக்கிய சந்தைகளாகும்.

ஏன் ரெட்மி நோட் 15 க்கு அடுத்தபடியாக ரெட்மி நோட் 16 அறிமுகம் ஆகவில்லை? ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக ஆண்டு சுழற்சியின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும், ஆனால் இந்த முன்கூட்டிய பதிவு, ரெட்மி நோட் 17 சீரிஸ் முந்தைய தலைமுறைகளை விட முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை காட்டுகிறது.

மேலும், ஷாவ்மீ தனது தயாரிப்பு வரிசைகள் முழுவதும் பெயரிடும் உத்தியை மாற்றக்கூடும் என்றும் பேசப்படுகிறது. கிடைக்கபெற்ற அறிக்கைகளின் படி, இந்நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் குடும்பங்களில் எண்களை சீரமைக்க முயற்சிக்கக்கூடும், இது "நோட் 16" என்பதற்கு பதிலாக ரெட்மி நோட் 17 என்ற பிராண்டிங்கை கொண்டு வர வழிவகுக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Series Global Launch Tipped All New Pro Max Also Expected All you Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X