REDMI ஒரே போடு.. பட்ஜெட்ல 9000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக மட்டுமல்லாமல், பிரீமியம் டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் ரெட்மி நோட் 17 ப்ரோ (REDMI Note 17 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4) சிப்செட்டுடன் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.
இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. பெரிய பேட்டரி இருப்பதால் 8.46 எம்எம் தடிமன் வருகிறது. ஆகவே, ஸ்லிம்மாக எதிர்பார்க்க முடியாது. அதேபோல 226 கிராம் எடை கொடுத்துள்ளது. இது மற்ற ஸ்மார்ட்போன்களைவிட கூடுதல் வெயிட்டாக இருப்பது போல தெரியலாம்.

இதுபோன்ற பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் அண்டர்வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்காது. ஆனால், இதில் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. மற்ற பீச்சர்களும் இப்படி பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன.
ரெட்மி நோட் 17 ப்ரோ அம்சங்கள் (REDMI Note 17 Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் மற்றும் டிசி டிம்மிங் கிடைத்துள்ளது. எச்டிஆர்10 (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 மெமரி கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்கை ப்ளூ (Sky Blue), நெபுளா பர்பிள் (Nebula Purple), பிளாக் (Black) கலர்கள் வருகின்றன.
8 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,709 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,968ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,224 ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 512 மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,650ஆகவும் இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications