இப்படி இருக்கனும் ஸ்மார்ட்போன்.. 24GB ரேம்.. 8340mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் புதிய மாடலான ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 24 ஜிபி ரேம், 8340mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் வெளியாகும் ரெட்மி மாடல்கள், ஓரிரு மாதங்களுக்குள் இந்திய மார்கெட்டிலும் வெளியாகும். இதனாலேயே ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஆல்-ரவுண்டர் மாடலாக இருக்கிறது. டிஸ்பிளே முதல் பேட்டரி வரையில் பீச்சர்கள் பட்டையை கிளப்பி இருக்கின்றன.

ரெட்மி நோட் 17 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 17 Pro Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 447 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology 2.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன.
இதில் 300 சதவீத வால்யூம் பூஸ்ட் கிடைக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் (Hi-Res) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ( Optical Image Stabilization) கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
லைவ் மொமெண்ட் (Live Moment), எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் அண்டர் வாட்டர் மோட் (Underwater Mode) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 67W ஹைப்பர்சார்ஜ் (HyperCharge) சப்போர்ட் கொண்ட 8340mAh சிலிகான்-கார்பன் பேட்டரி (Silicon-Carbon Battery) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. ஆக்டா கோஸ் ப்ராசஸர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. ரூ.38,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது. இந்திய மார்கெட்டில் வெளியாகினால், இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த மாடலுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலும் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications