மிட்-ரேஞ்ச் மிரளுது.. 9000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 50MP OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ரெட்மி பிரியர்களும் காத்துக் கொண்டிருந்த தேதி உறுதியாகிவிட்டன. ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் (Redmi Note 17 Pro Series) மாடல்கள் அடுத்த வாரம் வெளியாக இருக்கின்றன. இந்த வெளியீட்டு தேதியை தொடர்ந்து, பட்ஜெட் மற்றும் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.
சீன மார்கெட்டில் ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டன. பெரிய பேட்டரி கொண்ட மாடல்களாக இருப்பதால், கேமிங் பிரியர்களை அதிகமாக வைத்திருக்கும் இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்டது.

வருகிற செப்டம்பர் 15ஆம் தேதியில் ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, வெளியீட்டுக்கு பிறகு அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைகக் இருப்பதும் உறுதியாகும்.
10000mAh பேட்டரி கொண்ட சீரிஸாக வெளியாகும் என்பது மட்டுமே மைக்ரோசைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், முக்கிய பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் கசிந்துவிட்டன. கிட்டத்தட்ட சீன வேரியண்ட்டை போலவே இருக்கின்றன.
இதில் ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன், மிட்-ரேஞ்ச் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான பீச்சர்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பிரீமியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் சிப்செட் மற்றும் அதிக பேக்கப் கொடுக்கும் பெரிய பேட்டரியையும் வைத்துள்ளது. இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் கசிந்த பீச்சர்களை பார்க்கலாம்.
ரெட்மி நோட் 17 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 17 Pro Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. மேலும், 2000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 6s Gen 4) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட இருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரியை கொடுக்கிறது.
இந்த பெரிய பேட்டரியுடன் 226 கிராம் எடை கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்க இருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.38,000 பட்ஜெட்டில் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
இந்த பீச்சர்களை ரெட்மி நிறுவனம் உறுதி செய்யவில்லை. சீன மார்கெட்டில் வெளியான மாடல்களை வைத்து இந்திய மார்கெட்டில் கசிந்த பீச்சர்களாக மட்டுமே இவை இருக்கின்றன. இருப்பினும், இதில் பெரும்பாலான பீச்சர்கள் அப்படியே இடம்பெறும். ஏனென்றால், முன்னதாக வெளியான ரெட்மி மாடல்கள் அப்படித்தான் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
