Home
Mobile

தேதி குறிச்சாச்சு.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. புது REDMI போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் (Redmi Note 17 Pro Series) மாடல்களின் வெளியீட்டு தேதி கசிந்துள்ளது. குளோபல் மார்கெட்டின் வெளியீட்டுக்கு முன்னதாகவே இந்த தேதி கசிந்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இதற்கு காரணம், 10000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது.

குளோபல் மார்கெட்டில் ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro), ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இந்த வெளியீ்ட்டுக்கு முன்னதாகவே பீச்சர்கள் கசிந்துவிட்டன. இப்போது, இந்திய வெளியீட்டு தேதியும் கசிந்துள்ளது.

தேதி குறிச்சாச்சு.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ம்டல்?

டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) அவரது எக்ஸ் தளத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதியன்று இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்டபோன்கள் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரெட்மி நோட் 16 ப்ரோ சீரிஸ் (Redmi Note 16 Pro Series) மாடல்களை விட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரையில் கூடுதல் விலை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் முழு பீச்சர்களும் ஏர்கனவே கசிந்துவிட்டன. பெரிய பேட்டரி, அதிக ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஹூட் கன்ட்ரோல் பீச்சர்கள் கிடைக்க இருப்பதால், இவற்றை கேமிங் மாடல்களாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Redmi Note 17 Pro Max Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக இந்க ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 12 ஜிபி ரேம் வருகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது.

6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS ) பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கொடுக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

IP69 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69K ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 64W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது. 6.83 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமர கிடைக்க இருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் 3 கொடுகக்ப்பட்டு உள்ளது. இந்திய வெளியீட்டுக்கு முன்பாக விலை, பட்ஜெட் விவரங்கள் தெரியவரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X