ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், பெரிய பேட்டரியை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களும் மிரளும்படியான பேட்டரி பீச்சர்களுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (REDMI Note 17 Pro Max) மாடல் களமிறங்க இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதியுடன் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
ரெட்மி நோட் 17 ப்ரோ (REDMI Note 17 Pro) ஸ்மார்ட்போனானது, சீன மார்கெட்டில் கடந்த ஜூலை மாதத்தில் 9000mAh பேட்டரியுடன் களமிறங்கியது. ஆகவே, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் இதைவிட பெரிய பேட்டரி எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி 10000mAh பேட்டரியை நோட் 17 ப்ரோ மேக்ஸ் கொடுக்க இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த முறை சீன மார்கெட்டில் இல்லாமல், குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்தியா உள்ளிட்ட மற்ற ஸ்மார்ட்போன் மார்கெட்களிலும் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த வெளியீட்டு தேதியுடன் சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎஸ் உள்ளிட்ட பீச்சர்கள் தெரியவந்துள்ளன.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (REDMI Note 17 Pro Max Specifications): 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 5) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கபட உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரியுடன் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமராவை கொடுக்க உள்ளது. ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) பீச்சர்கள் கொடுக்கப்பட உள்ளன. IP69K ரேட்டிங், IP69 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. 3 மீட்டர்கள் வரையில் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் டியூரபிலிட்டி கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன, விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், ரூ.30,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக வெளியான ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் கிடைத்தது.
ஆகவே, டிஸ்பிளேவில் ப்ரோ மேக்ஸ் பெரிய மாற்றத்தை கொடுக்கவில்லை. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. ஆகவே, பேட்டரி தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications