Home
Mobile

மொத்த மார்கெட் மிரளுது.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புது REDMI ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 10000mAh பேட்டரி கொண்ட மாடல்களுக்கு போட்டியாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) களமிறங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. முக்கிய பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களும் தெரிய வந்துள்ளன.

குளோபல் மற்றும் சீன மார்கெட்டில் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. இந்த வெர்ஷன்களில் கொடுக்கப்பட்ட 10000mAh பேட்டரியானது, இந்திய வெர்ஷனிலும் கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மொத்த மார்கெட் மிரளுது.. 10000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்!

செப்டம்பர் 15 ஆம் தேதி ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் வெளியாக இருக்கிறது. இதில் 10000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விவரங்கள் மட்டுமே அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட்டை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Redmi Note 17 Pro Max Specifications): 10000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) கிடைக்க இருக்கிறது.

இந்த புரொடெக்சனுடன் 6.83 இன்ச் கிரிஸ்டல்ரெஸ் அமோலெட் (CrystalRes AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட இருக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 447 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3840Hz PWM டிம்மிங் பிரிகொன்சி கொடுக்கப்பட இருக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்க இருக்கிறது. அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Octa Core Snapdragon 6 Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது.

சியோமிஹைப்பர் ஓஎஸ் 6 (Xiaomi HyperOS 3) கொடுக்கப்பட இருக்கிறது. இதில் கேமராவுக்கு ஏகப்பட்ட ஏஐ பீச்சர்கள் கிடைக்கும். ஆகவே, ஏஐ எரைஸ் ப்ரோ (AI Erase Pro), ஏஐ கிளார் ரிமூவல் (AI Glare Removal), ஏஐ இமேஜ் எக்ஸ்பான்சன் (AI Image Expansion), ஏஐ ஸ்கை (AI Sky), ஏஐ பொக்கெ (AI Bokeh), ஏஐ கட்அவுட்ஸ் (AI Cutouts) மற்றும் ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மெண்ட் (AI Image Enhancement) உள்ளது.

இந்த பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனானது ரூ.43,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இருக்கும் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். பட்ஜெட் பிரியர்களுக்கு சற்று அதிகமாக தோன்றலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Pro Max With 10000mAh Battery To Launch in India on September 15 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X