ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10100mAh பேட்டரி.. 200MP கேமரா.. ஜூலையில் முரட்டு Redmi போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இதுவரையில் வெளியான ரெட்மி ஸ்மார்ட்போன்களை பின்னுக்கு தள்ளும்படியான பீச்சர்களுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 10100mAh பேட்டரி, 200 எம்பி கேமராவை கொடுக்க இருக்கிறது.
சீன மார்கெட்டில் ஜூலை மாதத்தில் ரெட்மி நோட் 17 சீரிஸ் ( Redmi Note 17 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ரெட்மி நோட் 17 (Redmi Note 17), ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) ஆகிய மாடல்கள் களமிறங்க இருக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது.
மேலும், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட உள்ளது. ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 1.5K பிளாட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
9000mAh பேட்டரி மற்றும் 50 எம்பி கேமரா கிடைக்க இருக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களும் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, 1.5K பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.
அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க மீடியாடெக் டைமன்சிட்டி 7500 (MediaTek Dimensity 7500) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 10100mAh பேட்டரி மற்றும் 200 எம்பி கேமராவை கொடுக்க இருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் ஃபுல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. IP69, IP69K ரேட்டிங் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ரெட்மி நோட் 15 ப்ரோ (REDMI Note 15 Pro) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோபிளஸ் (REDMI Note 15 Pro+) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆகவே, ரெட்மி நோட் 17 சீரிஸ் மாடல்களை சீன மார்கெட்டுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.
இதற்கு எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏனென்றால், ரெட்மி நோட் 15 ப்ரோ மாடலில் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைத்தது. இதே கேமரா செட்டப்புடன் ரெட்மி நோட் 15 ப்ரோபிளஸ் கிடைத்தது. மேலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கிடைத்தது.
ஆனால், ரெட்மி நோட் 15 ப்ரோபிளஸ் ஸ்மார்ட்போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டது. 6580mAh பேட்டரி கிடைத்தது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலையும் முறையே ரூ.30,000 மற்றும் ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் இருந்தன. ஆகவே, ரெட்மி நோட் 17 ப்ரோ மாடல்களை ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications