யாரு சாமி அவன்.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 9210mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
குளோபல் மார்கெட்டில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 9210mAh பேட்டரி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா போன்ற பக்கா பீச்சர்களுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி (REDMI Note 17 Pro Max 5G) வெளியாக இருக்கிறது. இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 17 5ஜி மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியாகிவிட்டன. இதில் ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஆனால், குளோபல் மார்கெட்டில் ப்ரோ மட்டுமல்லாமல், ப்ரோ மேக்ஸ் மாடலும் வெளியாக இருக்கிறது. இதன் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (REDMI Note 17 Pro Max 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 5 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கொடுத்துள்ளது.
6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஜெனரேஷன் அப்டேட் கொடுக்க இருக்கிறது. செக்யூரிட்டி அப்பேட்களும் கிடைக்க இருக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 மெமரி கொண்ட வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் வெளியாக இருக்கிறது.
6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2000 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9210mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த சிலிகான்-கான்பன் பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் கிடைக்கிறது. 400 சதவீத வால்யூம் பூஸ்ட் சப்போர்ட் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. ஐபி66 + ஐபி68 + ஐபி69 மற்றும் ஐபி69கே ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
பிளாக் (Black), கிளவுட் ப்ளஸ் (Cloud Blush), கிரீன் (Green) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. 8.65 எம்எம் தடிமன் மற்றும் 229.5 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி இருக்கிறது. இந்தியாவில் வெளியாகுமா என்பது ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தெரியவந்துவிடும்.


Click it and Unblock the Notifications