ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புயல்.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. புது ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது முதல் 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி (Redmi Note 17 Pro Max 5G) ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (Redmi Note 17 Pro Max 5G Specifications): 6.83-இன்ச் 1.5கே டிஸ்பிளே உடன் புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3,200Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப் (Qualcomm's Snapdragon 6 Gen 5 chip) உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
HyperOS 3 மூலம் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த புதிய ரெட்மி போனில்
10,000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போனை 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும்.

அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
பிளாக் (Black), கிளவுட் ப்ளஸ் (Cloud Blush) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் இந்த புதிய ரெட்மி போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் எடை 229 கிராம் ஆகும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன.

தற்போது ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த போனின் விலையைப் பார்க்கலாம்.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடலின் விலை 79,980 yen (இந்திய மதிப்பில் ரூ.47,940)-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடலின் விலை 99,980 yen (இந்திய மதிப்பில் ரூ.59,957)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications