Home
Mobile

இந்திய சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ரெட்மி நிறுவனத்தின் முதலாவது 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ரியல்மி நிறுவனத்தின் 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் இங்கு கிடைத்தாலும், இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருப்பதால், இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் தனி வரவேற்பை பெற்று இருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் 4 நாட்கள் வரையில் பேக்கப் பெற்று கொள்ளலாம். 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் மற்றும் 1600 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கொடுக்கிறது. 100W சார்ஜிங் கிடைப்பதால், 20 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 1 நாள் முழுவதும் பேக்கப் கிடைக்கும். ரிவர்ஸ் சார்ஜிங், சார்ஜிங் புரொடெக்சன் உள்ளிட்ட கூடுதல் பேட்டரி பீச்சர்களும் உள்ளன.

இந்திய சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. மாடல்?

பெரிய பேட்டரி கிடைத்தால், அதில் அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஃபைவ் ஸ்டார் டைட்டன் குவாலிட்டி சர்டிபிகேஷன் கிடைக்கிறது. ஆகவே, 2 மீட்டர்கள் ஆழம் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

72 மணி நேரங்களுக்கு அண்டர்வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும். 3 மீட்டர்கள் உயரத்தில் இருந்து விழுந்தாலும் தாக்குப்பிடிக்கும்படி டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதுபோக IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இப்படி டியூரபிலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (Redmi Note 17 Pro Max 5G Specifications): 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட சூப்பர் சன்லைட் டிஸ்பிளே கிடைக்கிறது. பிளாட் அமோலெட் பேனல் கொண்டுள்ளது. எச்டிஆர்10பிளஸ் மற்றும் டால்பி விஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் வெட் டச் 2.0 கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் ஆக்டா கோர் (Snapdragon 6 Gen 5 4nm Octa Core) சிப்செட் கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் அட்ரினோ கிராபிக்ஸ், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கிடைக்கிறது.

2X இன்-சென்சார் ஜூமிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆட்டோ சீன் டிடெக்சன் (Auto Scene Detection), அண்டர்வாட்டர் மோட் (Underwater Mode) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் ஸ்பீக்கர்கள் வருகின்றன. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 49,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.55,999ஆகவும் உள்ளது.

இருப்பினும், ரூ.5,000 கிரெடிட் கார்டு தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.44,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம். செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யலாம். ஸ்டீல்த் பிளாக், மேட்சா கிரீன் மற்றும் சீக்ரெட் சன்ரைஸ் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Pro Max 5G With 10000mAh Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X