Home
Mobile

மிரளுது மார்கெட்.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP OIS கேமரா.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அடுத்த 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி (Redmi Note 17 Pro Max 5G) ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆகஸ்ட் 27ஆம் தேதியில் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இதற்கு ஏற்ப ரெட்மி இந்தியா நிறுவனமானது, எக்ஸ் தளத்தில் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதை டீசர் வழியாக உறுதி செய்துள்ளது.

மிரளுது மார்கெட்.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

ஆனால், பீச்சர்கள் மற்றும் விலை குறித்த எந்த விவரங்களும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல வெளியீட்டு தேதியும் உறுதியாகவில்லை. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் வெளியான மாடலில் கிடைத்த பெரும்பாலான பீச்சர்கள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டையும் குளோபல் வெர்ஷனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (Redmi Note 17 Pro Max 5G Specifications): 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் மற்றும் டிசி டிம்மிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

டிசிஐ பி3 வைடு கலர் காமட் மற்றும் 447 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெட் டச் டெக்னாலஜி 2.0 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), அண்டர்வாட்டர் மோட் (Underwater Mode) மற்றும் அல்ட்ரா எச்டி மோட் (Ultra HD Mode) உள்ளிட்ட பீச்சர்களை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி கொடுக்கிறது.

32 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.57 எம்எம் தடிமன் மற்றும் 223 கிராம் எடை கொடுத்துள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

மேலும், IP69K ரேட்டிங் உள்ளது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் (Snapdragon 6 Gen 5 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதில் சில பீச்சர்களில் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. ரூ.48,000 பட்ஜெட்டில் குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. இந்தியாவில் கம்மியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Pro Max 5G With 10000mAh Battery Launch Soon in India Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X