ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.4,050 ஆஃபரில் 10000mAh பேட்டரி REDMI போன்.. 100W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் பெரிய பேட்டரி கொண்ட மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி (Redmi Note 17 Pro Max 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.4,050 ஆஃபரில் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 49,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.55,999ஆகவும் உள்ளது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,050 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.45,949 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மேலும், 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை மற்றும் தள்ளுபடி விலையுடன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டீல்த் பிளாக் (Stealth Black), மேட்ச்சா கிரீன் (Matcha Green) மற்றும் சீக்ரெட் சன்ரைஸ் (Secret Sunrise) ஆகிய மூன்று கலர்களில் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (Redmi Note 17 Pro Max 5G Specifications): ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Octa Core 4nm Snapdragon 6 Gen 5) சிப்செட் மற்றும் அட்ரினோ ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. மேலும், சியோமி ஹைப்பர் ஏஐ (Xiaomi Hyper AI) கிடைக்கிறது. இதில் ஏஐ டிரான்ஸ்லேட் (AI Writing), ஏஐ டைனாமிக் வால்பேப்பர் (AI Dynamic Wallpapers) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.
மேலும், ஏஐ ஸ்பீச் ரிககனைசேஷன் (AI Speech Recognition), சியோமி ஹைப்பர் ஐலேண்ட் (Xiaomi HyperIsland), சியோமி ஹைப்பர் கனெக்ட் (Xiaomi HyperConnect) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமராவில் ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் ( AI Imaging Assistant) கிடைக்கிறது. இதில் ஏஐ கிளார் ரிமூவல் (AI Glare Removal), ஏஐ பியூட்டிபை (AI Beautify), ஏஐ எரைஸ் ப்ரோ (AI Erase Pro) உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. அண்டர்வாட்டர் மோட் (Underwater Mode) கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 1.5K ரெசொலூஷன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரியை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 4 நாட்கள் வரையில் பேக்கப் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
