Home
Mobile

மொத்த போன்களும் காலி.. 9000mAh பேட்டரி, 3 மீட்டர் வீழ்ச்சியை தாங்கும், IP69K.. புது Redmi Note 5ஜி போன்!

ஜூலை 14 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அறிமுக விழாவிற்கு முன்னதாக, ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம், அந்நாளில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவிலேயே மிகப்பெரிய பேட்டரி திறன்களில் ஒன்றை கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி மேம்பாட்டுடன், உயர்தர (flagship-grade) பிளாட் டிஸ்பிளே (flat display), நான்கு ஆண்டு பேட்டரி மாற்று கொள்கை (battery replacement policy) மற்றும் கூடுதலான சில உறுதித்தன்மை அம்சங்களையும் ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களும் மற்றும் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்களும்: ரெட்மி நோட் 17 ப்ரோ மாடலில் 9000mAh பேட்டரி, 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (wired fast charging) மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி ஆகியவை இடம்பெறும் என்று ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது.

9000mAh பேட்டரி, IP69K.. புது Redmi Note 5ஜி போன்!

இதோடு ரெட்மி நிறுவனம் ஷாவ்மீயின் 'பேட்டரி ஆரோக்கிய திட்டத்தையும்' (battery health programme) அறிமுகப்படுத்துகிறது. இதன்கீழ் வாங்கிய நான்கு ஆண்டுகளுக்குள் பேட்டரியின் அதிகபட்ச திறன் 80 சதவீதத்திற்கு கீழே குறைந்தால், பயனர்கள் இலவசமாக பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம்.

ஐந்தாவது ஆண்டில் இதே சிக்கலை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, அதிக திறன் கொண்ட பேட்டரிக்கு இலவச மேம்படுத்தல் (upgrade) வழங்கப்படும் என்றும் ரெட்மி நிறுவனம் கூறுகிறது. ஸ்லிம் டிசைன் அல்லது அதிவேக சார்ஜிங்கை விட பேட்டரி நீடித்து உழைப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் பயனர்களை, 9,000mAh பேட்டரி மற்றும் நீண்ட கால பேட்டரி மாற்றுக் கொள்கை ஆகியவை நிச்சயம் ஈர்க்கக்கூடும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ மாடலில் 3,500 நிட்ஸ் (nits) பீக் ப்ரைட்னஸ் கொண்ட 1.5கே பிளாட் ஆன OLED டிஸ்பிளே இடம்பெறும்; இது ஆன் பேப்பரில் (on paper) இப்பிரிவிலேயே மிக அதிக பிரகாசம் கொண்ட டிஸ்பிளேக்களில் ஒன்றாகும். இந்த டிஸ்பிளே 'Green Mountain Eye Protection' தொழில்நுட்பத்தை ஆதரிப்பதாகவும், இருண்ட சூழலில் வசதியாகப் பார்ப்பதற்காகப் பிரகாசத்தை 1 நிட் (nit) வரை குறைக்க முடியும் என்றும் ரெட்மி கூறுகிறது.

மேலும் இது Corning Gorilla Glass Victus 2 பாதுகாப்பு, 3 மீட்டர் உயரத்திலிருந்து மார்பிள் தரையில் விழுந்தாலும் தாங்கும் திறன், SGS மற்றும் CQC ஆகியவற்றின் டூயல் பைவ் ஸ்டார் உறுதித்தன்மை சான்றிதழ்கள் மற்றும் IP66, IP68, IP69, IP69K ஆகிய பாதுகாப்பு தரநிலைகளையும் (ingress protection ratings) ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Qualcomm Snapdragon 6 Gen 5 சிப்செட் மூலம் இயங்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 200MP ப்ரைமரி ரியர் கேமராவை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது இந்திய அறிமுகம்? ரெட்மி நோட் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜூலை 14 அன்று சீனாவில் அறிமுகமாகவுள்ளது (சீன நேரப்படி மாலை 7 மணி / இந்திய நேரப்படி மாலை 4:30 மணி). இந்த சீரீஸில் Redmi Note 17 மற்றும் Redmi Note 17 Pro ஆகிய மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதேவேளையில், Pro Max மாடல் ஒன்றும் வரக்கூடும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய வெளியீடு குறித்த திட்டங்களை ஷாவ்மீ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரெட்மி நோட் 17 ஏற்கனவே BIS சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது; ஆக இது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இதோடு ப்ரோ மாடல்களும் வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Pro 9000mAh battery 3500 nits Display IP69K and more confirmed Ahead Launch on July 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X