ஸ்மார்ட்போன் மார்கெட் மிரளுது.. பட்ஜெட்ல 9000mAh பேட்டரி.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் நோட் 17 சீரிஸ் மாடல்கள் வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கும் நேரத்தில் ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி (Redmi Note 17 Pro 5G) ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகி இருந்தன. இப்போது, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் உள்ளட்ட பீச்சர்கள் கசிந்துள்ளன.
ரெட்மி நோட் 17 5ஜி சீரிஸ் (Redmi Note 17 5G Series) இந்த மாதம் வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ரெட்மி நோட் 17 5ஜி (Redmi Note 17 5G) மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்தியாவிலும் இந்த மாடல்கள் வெளியாக இருக்கின்றன.

இதனாலேயே இங்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்தியாவில் ப்ரோ மாடல் வெளியாகுமா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் எக்ஸ் தள பதிவு வழியாக தெரியவந்துள்ளது. பட்ஜெட் பிரியர்கள் விரும்பும்படி 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
ப்ளூ (Blue) மற்றும் டார்க் நைட் (Dark Night) கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்களை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இருப்பினும், ரெட்மி நோட் 17 ப்ரோ மாடல் மீதே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அதில் 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. முதலில் இந்த மாடலின் பீச்சர்களை பார்க்கலாம்.
ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 17 Pro 5G Specifications): 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) டிஸ்பிளே புரொடெக்சனை இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.
ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. 9000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும்படி IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 அல்ட்ரா வைடு கேமரா + 20 எம்பி செல்பீ கேமராவை கொடுக்க இருக்கிறது. இதில் பேட்டரி, டிஸ்பிளே புரொடெக்சன் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவையாகும். மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மட்டுமே. ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனை பார்க்கையில் 7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது.
இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகும். ப்ரோ மாடல் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications