செப்.17 குறிச்சாச்சு.. 9000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது REDMI 5G போன்.. எந்த மாடல்?
டபுள் ஃபைவ் ஸ்டார் குவாலிட்டி சர்டிபிகேஷன் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 9000mAh பேட்டரி, 67W சார்ஜிங், ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 உள்ளிட்ட பீச்சர்களுடன் ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி (REDMI Note 17 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பிரீமியம் குவாலிட்டி மாடலாக ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி அறிமுகமாகி இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பேட்டரி சிஸ்டம் மற்றும் கேமரா பிரியர்களுக்கு ஏற்ப அண்டர்வாட்டர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இருப்பினும், டிசைனில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. வழக்கம்போலவே இருக்கிறது. குவாலிட்டியாக இருப்பதால் பிரீமியம் லுக் கிடைக்கவில்லை.

ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI Note 17 Pro 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 3840Hz PWM டிம்மிங், எச்டிஆர்10பிளஸ் (HDR10) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Vision) உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாடிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், லைவ் மொமண்ட் (Live Moments), எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), அண்டர்வாட்டர் மோட் (Underwater Mode) மற்றும் அல்ட்ரா எச்டி மோட் (Ultra HD Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ப்ரோ மோட் (Pro Mode) மற்றும் டூயல் வீடியோ (Dual Video) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
16 எம்பி செல்பீ உள்ளது. 67W ஹைப்பர்சார்ஜ் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்கிறது. 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-பை சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், அல்ட்ராசோனிக் ப்ராக்சிமிடி, ஆம்பியன் லைட் உள்ளிட்ட சென்சார்கள் கிடைக்கின்றன.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட்/வாட்டர் ப்ரூப் கிடைக்கிறது. இதுபோக டபுள் ஃபைவ் ஸ்டார் குவாலிட்டி சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது. ஆகவே, குவாலிட்டியில் எந்த குறையும் இருக்காது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 36,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆகவும் உள்ளது.
ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.33,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம். வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யலாம். கிளவுட் ப்ளூ (Cloud Blue), ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) மற்றும் பர்பிள் வைப் (Purple Vibe) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications
