Home
Mobile

REDMI பிரிச்சி விட்டாப்ல.. 8340mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படியான பீச்சர்களுடன் ரெட்மி நோட் 17 சீரிஸ் (REDMI Note 17 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ரெட்மி நோட் 17 ப்ரோ (REDMI Note 17 Pro 5G) கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பேட்டரி மற்றும் சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. முழு பீச்சர்களும் தெரியவந்துள்ளன.

சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிய இந்த ரெட்மி நோட் 17 சீரிஸ் மாடல்கள் இப்போது குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி ரெட்மி நோட் 17 ஸ்மாரட்போன் வெளியாக இருக்கிறது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

REDMI பிரிச்சி விட்டாப்ல.. 8340mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த போன்?

இருப்பினும், குளோபல் மார்கெட்டில் ரெட்மி நோட் 17 5ஜி, ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதில் ரெட்மி நோட் 17 ப்ரோ 5ஜி மாடலானது ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 17 ப்ரோ அம்சங்கள் (REDMI Note 17 Pro 5G Specifications): 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் மொத்தமாக 5 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது.

மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8340mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyberOS 3) கிடைக்கிறது. மேலும், ஏஐ கிரியேட்டிவிட்டி அசிஸ்டன்ட் (AI Creativity Assitant) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடக்சன் கிடைக்கிறது.

ஐபி66 ரேட்டிங் + ஐபி68 ரேட்டிங் + ரேட்டிங் மற்றும் ஐபி69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐபி69கே ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ பேஸ் அன்லாக் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMI Note 17 Pro 5G With 50MP Camera 8340mAh Battery Full Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X