Home
Mobile

Redmi-யின் ராஜாதி ராஜன்.. 10100mAh பேட்டரி, 200MP கேமரா, IP ரேட்டிங் உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் அடுத்த மாதம் அதன் ரெட்மி நோட் 17 சீரீஸ் (Redmi Note 17 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நோட் 17 (Redmi Note 17), ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இன்னும் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், டிப்ஸ்டர் எக்ஸ்பீரியன்ஸ் மோர் (Experience More) வழியாக ரெட்மி நோட் 17, ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 3 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களும் லீக் செய்யப்பட்டுள்ளது.

Redmi-யின் ராஜாதி ராஜன்.. 10100mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்!

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்: மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஸ்டாண்டர்ட் மாடலானது 1.5கே ரெசல்யூஷன் கொண்ட 6.83-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இதில் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும்.

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு குறித்த தகவல் இல்லை என்றாலும், இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா பேக் செய்யப்படும் மற்றும் ஆப்டிகல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்: ப்ரோ மாடலிலும் 1.5கே பிளாட் டிஸ்பிளே பேனல் இருக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் டிஸ்பிளே சைஸ் குறித்த விவரங்கள் இல்லை. சிப்செட்டை பொறுத்தவரை முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) சிப் கொண்டு இயங்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகப்பெரிய 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ப்ரோ மாடலிலும் கூட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறும். இதோடு டூயல் ஸ்பீக்கர்கள், முழுமையான நீர்-எதிர்ப்பு (water-resistant) கொண்ட பாடி ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும்.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்: ப்ரோ மேக்ஸ் மாடலின் டிஸ்பிளே சைஸ் குறித்த விவரங்களும் இல்லை. ஆனால் இதுவும் 1.5கே ரெசல்யூஷன் ஆதரவுடன் கூடிய பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டிமென்சிட்டி 7500 (Dimensity 7500) சிப்செட் மூலம் இயங்கும்.

ப்ரோ மேக்ஸ் மாடலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இதில் மிகப்பெரிய 10,100mAh பேட்டரி ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம். மேலும், இதிலும் டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் முழுமையான நீர்-எதிர்ப்பு கொண்ட சேசிஸ் (fully water-resistant chassis) இடம்பெறும்.

ரெட்மி நோட் 17 சீரிஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? முதலில் இவைகள் சீனாவில் தான் அறிமுகமாகும் என்பதும், பின்னரே இந்திய சந்தைக்கு வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சண்டையில் ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.25,999 இல் இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், ஹைஎண்ட் மாடல்கள் ஆன ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள், அவற்றின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றை பொறுத்து ரூ.35000 முதல் ரூ.45000 பட்ஜெட்டிக்குள் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 17 Note 17 Pro Note 17 Pro Max Launch Next Month Display Chipset Camera Battery Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X