Home
Mobile

உறுதியானது முரட்டு சம்பவம்.. 8000mAh பேட்டரி.. 7 இன்ச் டிஸ்பிளே.. 50MP கேமரா.. புது REDMI போன்.. எந்த மாடல்?

பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக களமிறங்க இருக்கும் ரெட்மி நோட் 17 5ஜி (REDMI Note 17 5G) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. கூடவே, முக்கிய பீச்சர்கள் மற்றும் டிசைன் உறுதியாகி இருக்கிறது. எந்த தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது?

கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்பும்படியான சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாகியது. 8000mAh பேட்டரி மற்றும் 7 இன்ச் டிஸ்பிளே தட்டித் தூக்கும்படி இருந்ததால், இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

உறுதியானது முரட்டு சம்பவம்.. 8000mAh பேட்டரி.. 7 இன்ச் டிஸ்பிளே!

இதற்கு ஏற்ப விரைவில் வெளியாகும் என்று ரெட்மி இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், அதே பேட்டரி மற்றும் டிஸ்பிளே கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருந்தது. இப்போது, வெளியீட்டு தேதியுடன் அந்த சந்தேகத்துக்கு முடிவுக்கட்டப்பட்டு உள்ளது. சீனாவில் வெளியான அதே வெர்ஷன் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, அந்த தளத்தில் பீச்சர்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. இதில் 8000mAh பேட்டரி மற்றும் சீன வெர்ஷனில் கிடைத்த அதே டிசைன் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆகவே, லைட் ப்ளூ (Light Blue) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் உறுதியாகிவிட்டன. அதேபோல ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 4 4nm) கிடைக்க இருப்பதும், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருப்பதும் தெரியவந்துள்ளது.

மற்ற விவரங்கள் தெரியவில்லை. பட்ஜெட்டை பார்க்கையில், ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரூ.30,000 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,000 ஆகவும் இருக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சீனாவில் கிடைத்த விலையைவிட கூடுதலாக இருக்கிறது.

இருப்பினும், வெளியீட்டுக்கு பிறகே உண்மையான பட்ஜெட் விவரங்கள் தெரியவரும். கடந்த ஜனவரி மாதத்தில் ரெட்மி நோட் 15 5ஜி (REDMI Note 15 5G) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகியது. இதில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைத்தது.

3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்தது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Snapdragon 6 Gen 3 4nm 5G) சிப்செட் கிடைத்தது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு சியோமி ஓஎஸ் 2 கிடைத்தது. ஆகவே, ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 எதிர்பார்க்கலாம். 108 எம்பி மெயின் கேமரா கிடைத்து.

ஆனால், ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி கேமரா மட்டுமே கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5520mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருந்தது. ஆகவே, ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் அதைவிட அதிக விலைக்கே கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
REDMI Note 17 5G With 8000mAh Battery To launch in India on August 6 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X