பின்றானே இவன்.. ரூ.25,000 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பெரிய பேட்டரியை பட்ஜெட்டில் விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப கிடைக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாகவும் இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்ப வாய்ப்புகள் இருக்கிறது.
ரெட்மி நோட் 17 5ஜி அம்சங்கள் (REDMI Note 17 5G Specifications): 6.99 இன்ச் (2396 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு வருகிறது.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 17 5ஜி கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode), டைனாமிக் ஷாட்ஸ் (Dynamic Shots), ப்யூட்டி மோட் (Beauty Mode) மற்றும் போர்ட்ராய்டு எபெக்ட்கள் (Portrait Effects) கொடுத்துள்ளது. மேலும், ஏஐ ஸ்கை (AI Sky), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் (AI Image Expansion) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஏஐ சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் உள்ளது. 8.45 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple), டார்க் நைட் (Dark Night) மற்றும் ஆர்டிக் ப்ளூ (Arctic Blue) ஆகிய கலர்களில் இந்த ரெட்மி நோட் 17 5ஜி வாங்கி கொள்ள கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.25,999 பட்ஜெட்டில் இந்த ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கும்.


Click it and Unblock the Notifications