வெயிட்டிங் வேற மாறி.. 7700mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி ரெட்மி நோட் 17 5ஜி (REDMI Note 17 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பேட்டரி மற்றும் டிசைன் விவரங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. ஆனால், குளோபல் வேரியண்ட்டின் முழு பீச்சர்களும் தெரியவந்துள்ளன. பேட்டரியில் இரண்டுக்கும் மாற்றம் இருக்கிறது.
இந்தியாவில் வெளியாக இருக்கும் ரெட்மி நோட் 17 5ஜி 8000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. பர்பிள் மற்றும் ப்ளூ கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. ஆனால், குளோபல் வேரியண்ட்டில் பர்பிள் (Purple) மற்றும் ப்ளூ (Blue) மட்டுமல்லாமல், பிளாக் (Black) கலரும் கிடைக்க இருக்கிறது.

7700mAh பேட்டரி மட்டுமே வருகிறது. ஆகவே, இந்திய வேரியண்ட்டில் பெரிய பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரியை தவிர மற்ற பீச்சர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குளோபல் வேரியண்ட்டில் கிடைத்த மற்ற பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது கசிந்த பீச்சர்களாக மட்டுமே இருக்கிறது.
ரெட்மி நோட் 17 5ஜி அம்சங்கள் (REDMI Note 17 5G Specifications): சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 (Octa Core Snapdragon 4 Gen 4) சிப்செட்டை கொடுத்து இருக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட இருக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்க இருக்கிறது.
6.99 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ்ஸ் பீக் பிரைட்னஸ், 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் உள்ளது. 960Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுத்லுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 3 வேரியண்ட்களில் குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமர கொடுத்து இருக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கொண்ட மாடலாகவும் இந்த ரெட்மி நோட் 17 5ஜி வெளியாக இருக்கிறது. 2 டிபிக்கான கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7700mAh பேட்டரியை இந்த ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஏஐ பேஸ் அன்லாக், ஹை-ரெஸ் ஆடியோ, ஐபி65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் ஜெமினி, ஏஐ கிரியேட்டிவிட்டி அசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்திய வேரியண்ட்டில் பேட்டரியை தவிர மற்ற பீச்சர்கள் இதே போல இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications