Home
Mobile

நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்.. Realme-ஐ ஓடவிட்ட Redmi.. 200MP கேமரா, 7500mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்!

தம்பி.. நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் டா.. என்று கூறும் படியாக ரியல்மி (Realme) நிறுவனத்திற்கு கடும் போட்டியாக ரெட்மி (Redmi) நிறுவனம் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் பிரபலமான ரெட்மி நோட் சீரீஸின் (Redmi Note Series) கீழ்!

ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சீரிஸில் உள்ள ப்ரோ மாடல் ஆன ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மாடலில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi.. 200MP கேமரா, 7500mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்!

இதற்கு போட்டியாக ரெட்மி நிறுவனமும் 200எம்பி கேமரா உடனான ஒரு ப்ரோ மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்மார்ட் பிகாச்சு வழியாக கிடைத்துள்ள லீக் தகவலின்படி ரெட்மி நோட் 16 சீரீஸில் (Redmi Note 16 Series) 200-மெகாபிக்சல் கேமராவும் இடம்பெறும்.

குறிப்பிட்ட டிப்ஸ்டர் வெறுமனே ரெட்மி நோட் 16 சீரிஸ் என்கிற ஹேஷ்டேக்கை மட்டுமே பயன்படுத்தி உள்ளார். ஆனால் பெரும்பாலும் 200-மெகாபிக்சல் கேமராவானது ஸ்டாண்டர்ட் மாடலில் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக ரெட்மி நோட் 16 சீரீஸின் ப்ரோ மாடல்கள் ஆன ரெட்மி நோட் 16 ப்ரோ பிளஸ் (Redmi Note 16 Pro Plus) மற்றும் ரெட்மி நோட் 16 ப்ரோ (Redmi Note 16 Pro) மாடல்களில் இடம்பெறலாம்.

அதாவது 200-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி 16 ப்ரோ மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் மாடலுக்கு "சரிக்கு சமமான போட்டியாக" ரெட்மி நிறுவனம் 2 ஸ்மாட்போன்களை களமிறக்கும் என்பது போல் தெரிகிறது

போதாக்குறைக்கு ரெட்மி நோட் 16 சீரீஸின் ப்ரோ மாடல்களில் 1.5கே ஓஎல்இடி பிளாட் டிஸ்பிளே மற்றும் 7500mAh பேட்டரி இருக்கலாம் என்றும் ஆரம்ப கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரெட்மி நோட் 15 சீரீஸ் (Redmi Note 15 Series) அறிமுகம் செய்யப்படாததால் ரெட்மி நோட் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது அடுத்த ஆண்டு அதே மாதத்தில் வெளியிடப்படலாம் அல்லது சற்று முன்பே கூட வரலாம்.

ரியல்மி 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை பொறுத்தவரை, இது இந்த மாத (டிசம்பர் 2025) இறுதிக்குள் அல்லது ஜனவரி 2026 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று TENAA சான்றிதழ் வெளிப்படுத்துகிறது. இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 2026 இல் உலகளாவிய சந்தையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 4 நடக்கும் ரியல்மி வெளியீட்டு நிகழ்வு: ரியல்மி நிறுவனம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று 2 புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் - அது ரியல்மி வாட்ச் 5 (Realme Watch 5) மாடல் ஆகும். ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் - அது ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) மாடல் ஆகும்

அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிப்ஸ்டர் @yabhishekhd வழியாக, ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலை நிர்ணயங்களும் ஆன்லைன் வழியாக லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்

பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.15,999 என்றும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,499 என்றும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.19,499 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம். சரியான விலை டிசம்பர் 4 அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 16 Pro to Pack 200MP Camera to Compete With Realme 16 Pro Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X