Home
Mobile

அடுத்த மாதம் அறிமுகமாகும் புது Redmi 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 15 (Redmi Note 15) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் மாதம் இந்த ரெட்மி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இப்போது ரெட்மி நோட் 15 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 15 அம்சங்கள் (Redmi Note 15 Specifications): ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5ஜி எஸ்ஒசி (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு(Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளது.

அடுத்த மாதம் அறிமுகமாகும் புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

அதுவும் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 10-பிட் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மறறும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

அதுவும் 50எம்பி மெயின் கேமரா ( Light Fusion 400 sensor) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு புதிய ரெட்மி நோட் 15 போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். IP66 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதி கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 15 போனில் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

5800mAh பேட்டரி வசதி கொண்டுள்ளது ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. மிட்நைட் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டார் ஒயிட் நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போன் இந்தியாவில் ரூ.12999 அல்லது ரூ.13,999 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 to launch in India in December: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X