போனா வராது.. 50எம்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ((Redmi Note 15 SE 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 SE 5G Specifications): 6.77-இன்ச் (1080x2392 பிக்சல்ஸ்) கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ரெட்மி போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் , 3200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ், DCI-P3 கலர் கேமட் , TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த வால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
5800mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, BDS மற்றும் கலிலியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங் பெற்றுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி போனின் எடை 178 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications