Home
Mobile

ஏப்.2 அறிமுகம்.. அடிச்சு தூக்கும் விலையில் 5ஜி, 45W சார்ஜிங், 5800mAh பேட்டரி, 4K கேமரா.. புது Redmi போன்!

ரெட்மி நிறுவனம், மிகவும் பிரபலமான தனது நோட் சீரீஸின் கீழ் ஒரு புதிய மாடலை, ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (Redmi Note 15 SE 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

பெயர் குறிப்பிடுவது போலவே ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனானது முன்னதாக அறிமுகமான ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனிற்கு கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சுவாரசியமாக, புதிதாக வரும் மாடல் பழைய மாடலில் உள்ளதை விட பெரிய பேட்டரியை பேக் செய்யவுள்ளது.

ஏப்.2 அறிமுகம்.. அடிச்சு தூக்கும் விலையில் 45W சார்ஜிங், 5800mAh!

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி மாடலில், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5800mAh பேட்டரி இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் உள்ள 5,520mAh பேட்டரியை விட சற்றே பெரியதாகும்.

இதுவொரு பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் கூட - தற்போது மார்க்கெட்டில் நிலவும் "பிக் பேட்டரி" டிரெண்ட் உடன் இணைய ரெட்மி முயற்சிக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்த விலைப்பிரிவில் பேட்டரி லைஃப் ஆனது ஒரு முக்கிய முடிவெடுக்கும் காரணியாக (Decision Points) உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வேறு என்னென்ன அம்சங்கள் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி மாடலில் உறுதி செய்யப்பட்டுள்ளது? பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் உள்ள மைக்ரோசைட் வழியாக ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் மாடலுக்கு இணையான செயல்திறனை வழங்கும் என்றாலும், எஸ்இ மாடலில் - கேமரா விஷயத்தில் சில அம்சங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாண்டர்ட் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள 108எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ராவைடு அமைப்புடன் ஒப்பிடும்போது, எஸ்இ மாடலில் 4கே வீடியோ ஆதரவுடன் கூடிய 50எம்பி ப்ரைமரி கேமராவே உள்ளது. இது ஒரு எளிமையான கேமரா அனுபவத்தை குறிக்கிறது; பன்முகத்தன்மையில் போட்டியிடுவதை விட, செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டு உள்ளது போல் தெரிகிறது.

ஆனால் வடிவமைப்பை பொறுத்தவரை, ரெட்மி நிறுவனம் சிலநல்ல வேறுபாடுகளை சேர்த்துள்ளது. ரெட்மி நோட் 15 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக், ஃப்ராஸ்டட் ஒயிட் மற்றும் கிரிம்சன் ரிசர்வ் ஆகிய வண்ணங்களில், வீகன் லெதர் பேக் உடன் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தோற்றம் நோட் 15 சீரிஸை போலவே இருந்தாலும், எஸ்இ மாடலை தனித்துவமாக காட்ட - அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் ஃபினிஷ்களும் முக்கிய பங்காற்றும்.

OPINION - ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு தகுதியானதாக இருக்குமா? ரூ.20,000 - ரூ.25,000 விலைப்பிரிவானது, குறிப்பாக பேட்டரி திறன் விஷயத்தில், மிகவும் போட்டித்தன்மை நிறைந்ததாக மாறியுள்ளது. ரியல்மி நிறுவனம் ஏற்கனவே பி4 பவர் போன்ற மாடல்கள் மூலம் இந்த விலைப்பிரிவில் 10,000mAh பேட்டரியை வழங்கி, போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இது, மற்ற எல்லாவற்றையும் (மற்ற எல்லா அம்சங்களை) விட பேட்டரி லைஃப்க்கு முன்னுரிமை கொடுக்கும் வாங்குபவர்களின் எதிர்பார்ப்புகளை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறது. இந்த பிரிவில் உள்ள மற்ற ரியல்மி மாடல்கள் கூட 7000mAh பேட்டரிகளை வழங்குகின்றன. இதனால், 5800mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மிகவும் குறைவான திறன் கொண்டதாகவே தோன்றுகிறது.

இது ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி மாடலை சற்று வித்தியாசமான நிலையில் வைக்கிறது. பேட்டரி அளவில் முன்னிலை வகிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, இது சமநிலையை நோக்கமாக கொண்டிருப்பது போல் தெரிகிறது. சாதாரண மாடலை விட அதிக பேட்டரி திறன் அதிகரிப்பு மற்றும் அதே சிப்செட் - சிலருக்கான நல்ல தேர்வாக இருக்கலாம்.

கூடவே எடை, தடிமன் மற்றும் ஓவர்ஆல் பேலன்ஸ் (Overall Balance) ஆகிய விஷயங்களுக்கு முன்னரிமை அளிப்பவர்களுக்கும் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நடுநிலையான தேர்வாக தெரிகிறது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் ஒட்டுமொத்த தோற்றத்தைப் பெரிதாக மாற்றாமல், முன்பை விட பெரிய பேட்டரியை வழங்குகிறது.

இது எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பதை இறுதியில் அதன் விலையே தீர்மானிக்கும். ஸ்டாண்டர்ட் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,999 க்கு தொடங்கும் நிலையில், எஸ்இ மாடல் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையானால், சராசரியை விட சிறந்த பேட்டரி லைஃப் உடன் நம்பகமான, அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு ஸ்மார்ட்போனை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது ஈர்க்கக்கூடியதாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 SE 5G Roundup India Launch on April 2 Expected Price Who can Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X