Home
Mobile

லெதர் பேனலுடன் Redmi அடிச்சான் பாரு.. 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 5520mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 108 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 5520mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) வெளியாக இருக்கிறது. இந்த எஸ்இ மாடலில் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் இப்போது உறுதியாகி இருக்கின்றன.

3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் கிளாசியர் ப்ளூ (Glacier Blue), பிளாக் (Black) மற்றும் மிஸ்ட் பர்பிள் (Mist Purple) ஆகிய கலர்களில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆனால், இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனானது வீகன் லெதர் பேனலுடன் வெளியாக இருப்பது, போஸ்டர் வழியாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

லெதர் பேனலுடன் Redmi அடிச்சான் பாரு.. 3D டிஸ்பிளே.. 108MP கேமரா!

இது சீனாவில் வெளியான புது வருட செர்ரி ரெட் எடிஷன் (New Year Cherry Red Edition) போலவே இருக்கிறது. அதில் வீகன் லெதர் பேனல் தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருந்தன. ஆகவே, இந்தியாவில் வெளியாகும் இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி மாடலிலும், ஏற்கனவே மார்கெட்டில் கிடைக்கும் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது, ரூ.22,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.24,999 பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 5G Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) கிடைக்கிறது.

ஆனால், ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த செல்பீ ஷூட்டருக்கு 1080p ரெக்கார்டிங் கிடைக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5520mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. கிளாசியர் ப்ளூ கலர் மாடலானது 7.35 எம்எம் தடிமன், மிஸ்ட் பர்பிள் 7.4 எம்எம் தடிமன் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 SE 5G Leather Back Panel Launch in India on April 2 Flipkart Availability Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X