இப்படி டிசைன் பண்ணா யாருங்க விடுவாங்க? 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
வீகன் லெதர் ஃபினிஷை கொண்டுள்ளது ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (Redmi Note 15 SE 5G) ஸ்மார்ட்போன். மேலும் இதன் தடிமன் 7.35 மிமீ ஆகும். கர்வ்ட் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் டூயல் ரியர் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 SE 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080 x 2,392 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 எஸ்ஒசி (Qualcomm's Snapdragon 6 Gen 3 SoC) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

5520எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








