பிளிப்கார்ட்டில் ஆர்டர் மழை.. ரூ.24999 புது Redmi 5ஜி போன் ரூ.19999 க்கு.. 5800mAh பேட்டரி, IP66.. எந்த மாடல்?
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக.. ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஆக அறிமுகமான ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (Redmi Note 15 SE 5G) மாடலின் இந்திய விற்பனை ஆபர் விலையுடன் தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. புதிய கிரிம்சன் ரிசர்வ் கலர் ஆனது 7.82 மிமீ தடிமன் கொண்டதாக இருப்பதுடன், வீகன் லெதர் பினிஷ் உடன் வருகிறது. என்ன விலை? என்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி விலை மற்றும் ஆபர்: இந்தியாவில் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட பேஸிக் மாடலின் அசல் விலை ரூ.24,999 என்றும், அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.25,999 மற்றும் ரூ.27,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் மேற்கண்ட ஆப்ஷன்கள் தற்போது முறையே ரூ.19,999 (ரூ.5000 ஆபர் ), ரூ.21,999 மற்றும் ரூ.23,999 என்கிற சிறப்பு விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும், ஷாவ்மீ நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி அட்டையுடன் ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்கள் வரை இஎம்ஐ (EMI) வசதியையும் பெறலாம். ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.77-இன்ச் (1080x2392 பிக்சல்ஸ்) கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 3200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- DCI-P3 கலர் கேமட்
- TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட்
- சர்க்கேடியன் ஃப்ரெண்ட்லி மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ சான்றிதழ்கள்
- குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்
- அட்ரினோ ஜிபியு
- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை மெமரி விரிவாக்கம்
- இன்டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் அன்லாக்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2.88-இன்ச் லைட் ஹண்டர் 400 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 1/4-இன்ச் சென்சார் கொண்ட 20-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 4K/30 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800mAh பேட்டரி
- 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, BDS மற்றும் கலிலியோ
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2 ஓஎஸ்
- டூயல் சிம் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங்
- அளவீட்டில் 164x75.42x7.35மிமீ
- எடை சுமார் 178 கிராம்


Click it and Unblock the Notifications








