கொஞ்சம் பொறுங்க.. OLED டிஸ்பிளே.. ஐபி69 ரேட்டிங்.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் (Redmi Note 15 Pro series) ஸ்மார்ட்போன்களை இந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோம் 15 ப்ரோ பிளஸ் போன்ற போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் தற்போது ரெட்மி நோட் 15 ப்ரோ போனின் சில அம்சங்கள் மட்டும் வெளியாகி உள்ளது.
ரெட்மி நோட் 15 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 15 Pro Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் சீரிஸ்(Qualcomm's Snapdragon 7s series chipset)) சிப்செட் உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ போன் வெளிவரும். 1.5கே குவாட் கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங், 50எம்பி மெயின் கேமரா, 50எம்பி டெலிபோட்டோ கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும்.

தற்போது ரெட்மி நோட் 15 ப்ரோ போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி 15 5ஜி அம்சங்கள் (Redmi 15 5G Specifications): ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 288 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்
அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சர்க்கிள் டு சர்ச் (Circle to Search), AI ஏரேசர் (AI Eraser), ஏஐ ஸ்கை (AI Sky) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இந்த புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி போனில் உள்ளன.

ரிப்பிள் கிரீன் (Ripple Green), டைட்டன் கிரே (Titan Gray) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது ரெட்மி 15 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி போனின் விலை MYR 729 (இந்திய மதிப்பில் ரூ.15,000). அதேபோல் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தியாவில் புதிய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








