Home
Mobile

200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. Redmi Note 15 Pro Series ரேட் இதுதான்!

இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் (Redmi Note 15 Pro Series) வெளியாக இருக்கிறது. ஆனால், வெளியீட்டுக்கு முன்னதாக ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இது மிட்-ரேஞ்ச் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இன்று (ஜனவரி 29) காலை 11 மணிக்கு ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாக உள்ளன. இதில் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் வர இருக்கின்றன. இந்த வெளியீட்டுக்கு முன்பாகவே அமேசான் தளத்தில் ரேம், மெமரி மற்றும் கலர் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன.

200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. கார்பன் பிளாக் (Carbon Black), மிராஜ் ப்ளூ (Mirage Blue) மற்றும் சில்வர் ஆஷ் (Silver Ash) கலர்களில் கிடைக்க உள்ளது.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro+ 5G): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் காஃபி மோச்சா (Coffee Mocha) கலர்கள் உள்ளது.

மேலும், மிராஜ் ப்ளூ (Mirage Blue) கலரும் உறுதியாகி இருக்கின்றன. ஆனால், விலை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரியின் எக்ஸ் தளம் வழியாக விலை விவரங்கள் கசிந்துள்ளன. அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்ட ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களுடன் இதுவும் ஒத்துப்போகிறது.

200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

ஆகவே, ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. இதில் 2 வேரியண்ட்கள் மட்டுமே இருப்பது தெரிகிறது. ஆனால், ப்ரோ பிளஸ் மாடலில் 3 வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆக இருக்கிறது.

இதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200 எம்பி கேமரா கிடைக்க உள்ளது. இதில் எச்டிஆர் மற்றும் ஏஐ சப்போர்ட் கொண்ட அல்ட்ரா கிளியர் என்ஜின் வர இருக்கிறது. மல்டிபோகல் போர்ட்ராய்டு மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்க இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளே வருகிறது.

ஐபி66, ஐபி68, ஐபி69 மற்றும் ஐபி69கே ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைத்துள்ளது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஐஸ்லூப் கூலிங், 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்க இருக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWD டிம்மிங் கொண்ட டிஸ்பிளே உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro Series Colours RAM Storage Configurations Listed on Amazon Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X