Home
Mobile

ஜன.27 குறிச்சு வச்சிக்கோங்க.. இந்தியா முழுக்க வாங்கும் விலையில் 2 புதிய Redmi 5ஜி போன்கள்!

ரெட்மி (Redmi) நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான நோட் சீரீஸின் கீழ் 2 புதிய மாடல்களை, கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மாடல்கள் ஆகும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 2 உடன் உலகளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அதே டிஸ்பிளே, அதே பேட்டரி மற்றும் அதே சிப்செட்களுடன் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாவில்லை).

ஜன.27.. இந்தியா முழுக்க வாங்கும் விலையில் 2 புதிய Redmi 5ஜி போன்கள்!

இதற்கிடையில், எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) வழியாக ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ இந்திய வேரியண்ட்களின் சாத்தியமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

அதன்படி ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8GB + 256GB, 12GB + 256GB, மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்களிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த லீக் - குறிப்பிட்ட 2 ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது

ரெட்மி நோட் 15 சீரீஸ் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கலாம்? ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 - ரூ.28,000 என்கிற பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாடி குறிப்பிட்டபடி ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்து விட்டது. ஆக இந்திய வேரியண்ட்கள் ஆனது சீனாவில் அறிமுகமான மாடல்களில் உள்ள அதே அம்சங்களுடன் அறிமுகமாகும். இருப்பினும், இந்தியாவிற்கு வரும் மாடல்களில் உள்ள கேமரா செட்டப் ஆனது சீன மாடல்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் "புதிய" 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்னி நோட் 15 ப்ரோ மாடலில் 108 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்படலாம். ஆனாலும் இந்த இரண்டு போன்களும் சீன வேரியண்ட்களில் உள்ள அதே சிப்செட் மற்றும் அதே டிஸ்பிளேவை தான் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம்.

மேலும் இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில் சில வேறுபாடுகளை காணலாம்: அதாவது ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro Plus Redmi Note 15 Pro RAM Storage Leaked Expected India Launch on January 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X