Home
Mobile

ஜனவரி 29 உறுதி.. இந்தியாவுக்கு வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. 200MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 15 Pro Plus Specifications): 6.83-இன்ச் CrystalRes AMOLED டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 × 1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஜனவரி 29 உறுதி.. இந்தியாவுக்கு வருகிறது புதிய Redmi 5ஜி போன்..

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 chipset) உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் போனில் உள்ளது.

ஜனவரி 29 உறுதி.. இந்தியாவுக்கு வருகிறது புதிய Redmi 5ஜி போன்..

6500mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

காபி மோச்சா (Coffee Mocha), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் மிராஜ் ப்ளூ (Mirage Blue) நிறங்களில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,999 விலையில் அறிமுகமாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro Plus price, specifications leaked ahead of India launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X