வந்துட்டான்யா.. வந்துட்டான்.. சோனி கேமரா.. 7000mAh பேட்டரி.. புதிய Redmi 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro plus) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 7000எம்ஏஎச் பேட்டரி, சோனி கேமரா, டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் அம்சங்கள் ( Redmi Note 15 Pro plus Specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில 2772×1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 12-பிட் கலர் டெப்த், டிசி டிம்மிங், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4எனம்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த ரெட்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி + 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி (Satellite Edition) என நான்கு வேரியண்ட்களில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் புதிய ரெட்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா (Light Fusion 800) + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ லென்ஸ் என்கறி ட்ரிபிள் ரியர் கேமராக்கைள கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். P69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியுடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மிட்நைட் பிளாக், சிடார் ஒயிட், ஸ்கை ப்ளூ, கிளவுட் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஆனால் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை 1999 yuan (இந்திய மதிப்பில் ரூ.24,310).


Click it and Unblock the Notifications








