மார்க்கெட்டே மிரள போகுது.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த புதிய ரெட்மி போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 15 Pro Plus Specifications) : பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) கொண்ட குவாட் கர்வ்ட் ஓஎல்இடி (Quad Curved OLED) டிஸ்பிளே இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 chipset) உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
7000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








