2026 ஜனவரி வரைக்கும் எந்த போனும் வாங்காதீங்க.. ஏன்னா?
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் மிகவும் பேமஸ் ஆன நோட் சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) ஆகிய மாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இவ்விரு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும், என்ன விலைக்கு வெளியாகும்? என்கிற விவரங்கள் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட்பிரிக்ஸ் வலைத்தளம் ஆனது டிப்ஸ்டர் யோகேஷ் பிராருடன் இணைந்து - இந்தியாவில் ரெட்மி நோட் 15 சீரிஸின் லான்ச் டைம்லைன், விலை மற்றும் அம்சங்களை லீக் செய்துள்ளது. அதன்படி இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஜனவரி 2026 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

அதனை தொடர்ந்து ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகிய 2 மாடல்களை உள்ளடக்கிய இந்த சீரீஸ் 2026 ஜனவரி நடுப்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலோடு சேர்த்து ரெட்மி நோட் 15 சீரிஸின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை வரம்பு மற்றும் முக்கிய அம்சங்களும் பகிரப்பட்டுள்ளன.
அதன்படி ரெட்மி நோட் 15 சீரீஸின் விலை நிர்ணயம் ஆனது அதன் முன்னோடியான ரெட்மி நோட் 14 சீரீஸின் விலை நிர்ணயத்திற்கு இணையானதாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.22,400 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதோடு ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,900 க்கு அறிமுகமானது. ஆக ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 - ரூ.28,000 குள்ளும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 குள்ளும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்திய வேரியண்ட்கள் ஆனது சீனாவில் அறிமுகமான மாடல்களில் உள்ள அதே அம்சங்களைத்தான் பேக் செய்யும். இருப்பினும், இந்தியாவிற்கு வரும் மாடல்களில் உள்ள கேமரா செட்டப் ஆனது சீன மாடல்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் "புதிய" 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்னி நோட் 15 ப்ரோ மாடலில் 108 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்படலாம்
இரண்டு போன்களும் சீன வேரியண்ட்களை போலவே அதே சிப்செட் மற்றும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் வரலாம்
இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16GB வரை LPDDR4x RAM மற்றும் 512GB வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம். இரண்டுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளைகொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில்சில வேறுபாடுகளை காணலாம்: ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








