அதிருது இந்திய மார்க்கெட்.. 200எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய ரெட்மி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro Plus 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி 5ஜி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 Pro Plus 5G Specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772×1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (2560Hz instant touch sampling rate), 3200 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரெம் + 512ஜபி என மூன்று வேரியண்ட் உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி மெயின் Samsung HPE சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இதன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளன.
IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6580mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 208 கிராம் ஆகும். கார்பன் பிளாக், காபி மோச்சா மற்றும் மிராஜ் ப்ளூ நிறங்களில் இந்த போன வாங்க முடியும்.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி விலை: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.43,999 விலையிலும் வாங்க முடியும். தற்போது இந்த போனின் முன்பதிவு அமேசான்,எம்ஐ.காம் போன்ற தளங்களில் தொடங்கியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








