Home
Mobile

6580mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. ரூ.3,000 ஆஃபருடன் சேல்.. புது REDMI 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (REDMI Note 15 Pro+ 5G) ஸ்மார்ட்போனின் விற்பனையானது தள்ளுபடியுடன் தொடங்கிவிட்டது. 6580mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 200 எம்பி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், தள்ளுபடி மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.3,000 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

6580mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. ரூ.3,000 ஆபருடன் சேல்!

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (REDMI Note 15 Pro+ 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.

மேலும், சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் கிடைத்துள்ளது.

டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 447 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, பி3 கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

மெயின் கேமராவில் சாம்சங் எச்பிஇ (Samsung HPE) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைத்துள்ளது. அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி கொண்டுள்ளது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. ஏஐ ரைட்டிங் (Al Writing), ஏஐ ஸ்பீச் ரிககனைசேஷன் (Al Speech Recognition), ஏஐ இன்டர்பிரிட்டர் (Al Interpreter), ஏஐ சர்ச் (Al Search), ஏஐ டைனாமிக் வால்பேப்பர் (Al Dynamic Wallpapers), ஏஐ கிரியோட்டிவிட்டி (Al Creativity) உள்ளிட்ட ஏஐ பீச்சர்களை சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 கொடுத்து உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) ஆகிய செக்யூரிட்டி கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Note 15 Pro Plus 5G With 6580mAh Battery Available Under Rs 35000 in Amazon Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X