Home
Mobile

ஜன.29 அறிமுகமாகும் Redmi Note 15 Pro Plus 5G விலை லீக் ஆனது!

ஷாவ்மீயின் (Xiaomi) துணை பிராண்டான ரெட்மி (Redmi) நிறுவனம், இன்னும் சில நாட்களில் இந்திய சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அது ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ் (Redmi Note 15 Pro Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இதன் கீழ் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro Plus 5G) என மொத்தம் 2 மாடல்கள் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஜன.29 அறிமுகமாகும் Redmi Note 15 Pro Plus 5G விலை லீக் ஆனது!

இதற்கிடையில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் லீக் ஆகியுள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.38,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி உள்ளிட்ட பிற மெமரி ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் ரூ.40,000 க்கும் அதிகமான விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 2 உடன் உலகளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அதே டிஸ்பிளே, அதே பேட்டரி மற்றும் அதே சிப்செட்களுடன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எக்ஸ் தளம் வழியாக இதே டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ இந்திய வேரியண்ட்களின் சாத்தியமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதன்படி ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8GB + 256GB, 12GB + 256GB, மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்களிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த லீக் - குறிப்பிட்ட 2 ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது

இந்தியாவிற்கு வரும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் "புதிய" 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்னி நோட் 15 ப்ரோ மாடலில் 108 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்படலாம். ஆனாலும் இந்த இரண்டு போன்களும் சீன வேரியண்ட்களில் உள்ள அதே சிப்செட் மற்றும் அதே டிஸ்பிளேவை தான் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம்.

மேலும் இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில் சில வேறுபாடுகளை காணலாம்: அதாவது ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro Plus 5G India Price Storage Options Leaked Ahead January 29 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X