Redmi நோட் 15 5ஜி ப்ரோ போன் அறிமுகம்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. 512GB மெமரி.. என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ரெட்மி போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். மேலும் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்
ரெட்மி நோட் 15 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 15 Pro Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772×1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 12-பிட் கலர் டெப்த், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் உடன் புதிய ரெட்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் புதிய ரெட்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போனில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியுடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
7000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மிட்நைட் பிளாக், சிடார் ஒயிட், ஸ்கை ப்ளூ, கிளவுட் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். பின்பு இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ போனின் ஆரம்ப விலை 1499 yuan (இந்திய மதிப்பில் ரூ.18,225) ஆகும். தற்போது சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








