Home
Mobile

கொஞ்சம் கேப் விடுங்க ரெட்மி.. 200எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது Geekbench தளத்தில் 25080RABDI என்ற மாடல் நம்பர் புதிய ரெட்மி போன் காணப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி தான் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

கொஞ்சம் கேப் விடுங்க ரெட்மி.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 Pro 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1,280x2,772 பிக்சல்ஸ், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

200எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

6580mAh பேட்டரி வசதி ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Photo Credit: Redmi

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro 5G Spotted on Geekbench: May Launch Soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X