Home
Mobile

மொத்த இந்தியாவும் வாங்கும் பட்ஜெட் விலையில்.. 200MP கேமராவுடன் 2 புதிய Redmi 5ஜி போன்கள்!

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை ஷாவ்மீ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

எப்போது? ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜனவரி 29, 2026 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரெட்மி அறிவித்து உள்ளது. மேலும் இந்த போன்கள் 200எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்பதையும் ஷாவ்மீ உறுதிப்படுத்தி உள்ளது.

200MP கேமராவுடன் 2 புதிய Redmi 5ஜி போன்கள்!

என்ன விலைக்கு வரலாம்? ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 - ரூ.28,000 என்கிற பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம்.

மேலும் இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில் சில வேறுபாடுகளை காணலாம்: அதாவது ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.

முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான மெமரி விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் ரியர் கேமராக்கள் 4K 30 fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் செல்பீ கேமரா 1080p 30 fps ரெக்கார்டிங்கை வழங்கும்.

பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5,520mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP65 ரேட்டிங்கை கொண்டு உள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro 5G Redmi Note 15 Pro Plus 5G with 200MP cameras India Launch on January 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X