ஜன.27 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 200எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஜனவரி 27-ம் தேதி இந்தி புதிய ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 Pro 5G Specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1,280x2,772 பிக்சல்ஸ், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra ) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி உடன் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
6500mAh பேட்டரி வசதி ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








