Home
Mobile

2 நாள் தாங்கும் 6500mAh பேட்டரி, 200MP கேமரா, சின்ன OLED டிஸ்பிளே.. பட்ஜெட் வாசிகளின் கனவு போன்!

ரெட்மி நிறுவனத்தின் "நோட்" சீரீஸ் மாடல்களுக்கு இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்ததாக இந்தியாவில் ரெட்மி நோட் 15 சீரீஸ் கூடிய விரைவில் அறிமுகம் செய்யபப்ட்ட உள்ளது. முதலில் இந்த சீரிஸின் கீழ் 3 மாடல்கள் வருமென்றும், அனைத்துமே 5ஜி போன்களாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது ரெட்மி நோட் 15 சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 15 (Redmi Note 15), ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) ஆகிய மூன்று 5ஜி மாடல்கள் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது.

2 நாள் தாங்கும் 6500mAh பேட்டரி.. பட்ஜெட் வாசிகளின் கனவு போன்!

ஆனால் இப்போது இதில் ஒரு 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அது ரெட்மி நோட் ப்ரோ 4ஜி (Redmi Note 15 Pro 4G) மாடல் ஆகும், அதாவது 5ஜி ஆதரவுடன் வரும் ப்ரோ மாடலில் உள்ள அம்சங்கள் 4ஜி மாடலில், சற்றே மலிவான விலைக்கு கிடைக்கலாம்.

ரெட்மி நோட் ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? 4ஜி மாடல் ஆனது 5ஜி மாடலில் உள்ள டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (Dimensity 7400 Ultra) சிப்பிற்கு பதிலாக மீடியாடெக் ஹீலியோ ஜி200 அல்ட்ரா (MediaTek Helio G200 Ultra) சிப்செட்டை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கூடவே மைக்ரோஎஸ்டி கார்டுக்கான ஆதரவையும் கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி மாடலில் உள்ள அதே 200எம்பி (1/1.4-இன்ச்) ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கலாம். டிஸ்பிளே சற்று சிறியதாக 6.77 இன்ச் ஆகவும், இது 1280p+ க்கு பதிலாக 1080p+ ஆகவும் குறைக்கப்படலாம். ஆனாலும் இதுவொரு OLED பேனல் ஆக இருக்கும்

பேட்டரியை பொறுத்தவரை, ரெட்மி நோட் 15 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6500mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இந்த செல் 4ஜி நெட்வொர்க்குகளில் நீண்ட நாள் (அல்லது இரண்டு நாட்கள்) வரை எளிதாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்

ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.83-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்
- 108 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ்
- 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5520mAh பேட்டரி
- 45W பாஸ்ட் சார்ஜிங்

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.83-இன்ச் 1.5K pOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- 200-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ்
- 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
- 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6580mAh பேட்டரி
- 45W சார்ஜிங் ஆதரவு

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K pOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6500mAh பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 Pro 4G with 200MP Camera Tipped Pricing Will Slightly Lesser Than 5G Variant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X