ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 108எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.77 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்கள் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசிஐ பி3 (DCI P3) வைடு கலர் காமட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஹைப்பர் ஓஎஸ் 2 (Hyper OS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மல்டிபோகல் கேமரா செட்டப், கிளாசிக் போர்ட்ராய்டு, போகஸ் போர்ட்ராய்டு, ஆர்டிஸ்டிக் போர்ட்ராய்டு, பர்சனல் ஏஐ இமேஜிங் அசிஸ்டன்ட், ஏஐ குரூப் செல்பீ கேம் போன்ற பல கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும் IP65 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உடன் இந்த புதிய போன் வெளிவந்தது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.
மேலும் 5520mAh பேட்டரி மறறும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி, டூயல் 5ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.1இ ஜிபிஎஸ், குளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளன. க்ளேசியர் ப்ளூ, பிளாக் மற்றும் மிஸ்ட் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications