வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5520mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலான ரெட்மி நோட் 15 5ஜி (REDMI Note 15 5G) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் விலையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 108 எம்பி கேமராவும் கொடுக்கும் இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் மொத்த பீச்சர்கள் ரெட்மி பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
7.35 எம்எம் தடிமன் கொண்டுள்ள பாடியில் 5520mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பதால், அல்ட்ரா ஸ்லிம் லுக் கொண்டுள்ளது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுப்பதால், குவாலிட்டியிலும் மிரளவிடுகிறது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளன.

ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (REDMI Note 15 5G Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது. ஹைப்பர் ஓஎஸ் 2 (Hyper OS 2) உள்ளது.
6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைத்துள்ளது. மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசிஐ பி3 (DCI P3) வைடு கலர் காமட் கிடைத்துள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன. 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்கு 20 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொடுக்கிறது. மல்டிபோகல் கேமரா செட்டப் (Multifocal Camera Setup) கொண்டுள்ளது. கிளாசிக் போர்ட்ராய்டு (Classic Portrait), போகஸ் போர்ட்ராய்டு (Focus Portrait), ஆர்டிஸ்டிக் போர்ட்ராய்டு (Artistic Portrait) இதில் கிடைக்கின்றன. பர்சோனல் ஏஐ இமேஜிங் அசிஸ்டன்ட் (Personal AI Imaging Assistant) உள்ளது.
ஏஐ குரூப் செல்பீ கேம் (AI Group Selfie Cam) கொடுக்கிறது. IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5520mAh பேட்டரி கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.22,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ரூ.24,999 ஆகவும் இருக்கிறது. ரூ.3,000 பேங்க் தள்ளுபடி போக ரூ.19,999 ஆரம்ப விலைக்கு கிடைக்க உள்ளது. ஜனவரி 9ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அமேசான் மற்றும் எம்ஐ தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








