2026 ஜன.6 குறிச்சாச்சு.. 108MP கேமரா.. 5520mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. புது REDMI 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 15 5ஜி (REDMI Note 15 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 108 எம்பி கேமரா மற்றும் 5520mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் உறுதியாகின. இப்போது, வெளியீட்டு தேதி உறுதியாகி ரெட்மி பிரியர்களை வெயிட்டிங் செய்ய வைத்துள்ளது. இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பேட்டரி, டிஸ்பிளே, கேமரா மற்றும் டிசைன் போன்ற பீச்ச்கள் அமேசான் தளத்தில் வெளியாகிவிட்டன. இருப்பினும் பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், மார்கெட்டில் கசிந்துவிட்டது.

ஏனென்றால், இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இப்போது, அதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இதனாலேயே வெளியீட்டுக்கு முன்னதாகவே ஒட்டுமொத்த முக்கிய பீச்சர்களும் வெளியாகிவிட்டன. ஜனவரி 6 ஆம் தேதியில் விலை மற்றும் விற்பனை தேதி மட்டுமே புதிதாக இருக்கும்.
ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 5G Specifications): ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமராவை இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதுபோக செகண்டரி கேமரா மற்றும் ஃபிளாஷ் லைட் கொடுக்கிறது. இதுவொரு போர்ட்ராய்டு கேமரா மாடலாகும்.
ஆகவே, மல்டிபோகல் போர்ட்ராய்டு லெஜண்ட் (Mutifocul Portrait Legend) சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும், டைனாமிக் ஷாட் (Dynamic Shot) போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5520mAh பேட்டரி கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் போதும், 1.6 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
இந்த பேட்டரியுடன் ஸ்லிம் மாடலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, அதிக பேட்டரி கொண்ட ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்கலாம். 10 சதவீத ஜிபியூ பூஸ்ட் மற்றும் 30 சதவீத சிபியூ பூஸ்ட் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. 48 மாதங்களுக்கு லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்.
120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust and water resistance) கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவுக்கு ஹைட்ரோ டச் 2.0 (Hydro Touch 2.0) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த பீச்சர்களுடன் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 24,999ஆக இருக்கப் போகிறது. இந்த விலை மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ஆனால், பீச்சர்களை ரெட்மி இந்திய நிறுவனமே உறுதி செய்துள்ளது. அமேசான் மற்றும் ரெட்மி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








